பெண்ணிடம் நிலத்தை சுட்டதாக வழக்கில் சிக்கினார் சசி அண்ணன் மகன் மகாதேவன்!

தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் அமலா புஷ்பமேரி என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் விளார் பை- பாஸ் சாலையில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் இறந்தவர்களின் நினைவாக நினைவுத் தூண் கட்டப்படும் இடத்தின் அருகே தனக்கு சொந்தமான 2 கிரவுண்ட் நிலத்தை சசிகலா கணவர் எம்.நடராஜன், சசிகலாவின் அண்ணன் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் சிலர் அபகரித்ததாக கூறி இருந்தார்.
அதன்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் எம்.நடராஜன், டி.வி.மகாதேவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் டி.வி.மகாதேவனை கைது செய்வதற்காக தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ்தங்கையா தலைமையில் போலீசார் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள டி.வி.மகாதேவனின் வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் அங்கு அவர் இல்லை. தொடர்ந்து போலீசார் வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை போட்டனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே சசிகலா தரப்பைச் சேர்ந்த கணவர் நடராஜன், உறவினர் ராவணன், தம்பி திவாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் விரைவில் மகாதேவனும் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications