தமிழக முன்னாள் தலைமைச் செயலர் மாலதி மரணம் : கருணாநிதி இரங்கல்
புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி ஞாயிறுக்கிழமை காலை மருத்துவமனையில் மரணமைடைந்தார். அவருக்கு வயது 57.
தஞ்சாவூரில் பிறந்த மாலதி கடந்த, 1977ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார். உள்துறை செயலர், வணிக வரித்துறை கமிஷனர் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய அவர் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலராக பொறுப்பு வகித்தார்.கடந்த, 2003ம் ஆண்டு முதல் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சையுடன் பணியையும் தொடர்ந்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் 2011ம் ஆண்டு மே மாதம் புள்ளியியல் துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.
விருப்ப ஓய்வு
அவரது பதவிக்காலம் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உள்ள நிலையில், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில வாரங்களாக, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஞாயிறுக்கிழமை காலை 9.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி மாலதி மரணமடைந்தார். அவரது உடல் குமரன் நகர் ராகவன் காலனி முன்றாவது தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மாலதியின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாலதியின் மகள், சகோதரி, சகோதரர் ஆகியோருக்கு கருணாநிதி ஆறுதல் கூறினார். இதனையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதி இரங்கல்
மாலதியின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
நேர்மை, நாணயம், கடமை உணர்வுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் மறைந்த மாலதி அம்மையார்.துணிவோடும், தூய்மையோடும் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் செயலாற்றல் கொண்டவர்.
அவருடைய உடலுக்கு கடந்த காலத்தில் தாக்கிய நோய் குறித்து, அவருக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் உள்ள அனைவருக்கும் தைரியமூட்டும் கருத்துக்களை கட்டுரை மூலமாக வெளியிட்டதை யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்டவருடைய இழப்பு ஒரு அரசுக்கு மாத்திரமல்ல; அரசில் பணியாற்றக் கூடிய நேர்மையான மக்கள் பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பாகும் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications