சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்

இது குறித்து கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தரப்பில் கூறப்படுவதாவது,
உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கடந்த 24-03-12 அன்று 6.30 மணி முதல் சன் டிவியில் ஒளிபரப்பான செய்தி அவதூறானது, உள்நோக்கம் கொண்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஸ், விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, அணு உலை எதிர்ப்பாளர் முகிலன் போன்றவர்களை எந்த வித காரணமும் இன்றி காவல் துறை கைது செய்தது. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டது. அதாவது அணு உலைக்கு எதிரான இந்த போராட்டம் இப்போது சர்வதேச அளவில் ஒரு செய்தியாக உருவானதால் தமிழக அரசுக்கு இது பெருத்த அவமானத்தை தேடித் தந்ததுள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கூடங்குளத்தை இப்போது உற்று நோக்கிக் கொண்டிருகின்றன. எந்த வழியில் அணு உலை போராளிகளை சிக்க வைக்கலாம் என்று குழம்பிப் போன அரசு இப்போது அணு உலை போராளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்ற கட்டுக் கதையை அவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது.
அதன் விளைவாக தான் சதீஸ், வன்னி அரசு கைது நாடகம். இவர்கள் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதால் இவர்களை தீவிரவாதிகளாக காட்டி இவர்களுக்கும் உதயகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக அரசு ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்ச்சியில் சன் டிவி யும் முக்கிய பங்கேற்பாளராக உள்ளதால் இந்த தொலைக்காட்சி தொடர்ந்து உதய குமாருக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்கிறது.
இந்த பொய்யை முறியடிக்கும் வகையில் உதயகுமார் சன் நிறுவனம் இந்த செய்தி தவறானது என்று மன்னிப்பு கேட்டு தினகரன் நாளிதழில் அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தனது வக்கீல் மூலம் சன் தொலைக்காட்சிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications