கடற்கரையி்ல் காதலனை கட்டிப்போட்டுவிட்டு கல்லூரி மாணவி பலாத்காரம்: 4 பேருக்கு வலை
கருங்கல்: குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் சில தினங்களுக்கு முன் காதலனை கட்டிப்போட்டுவிட்டு அவரின் காதலியை 4 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது. அந்த 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 4 பேரில் 2 பேர் கேரள மாநிலம் விழிஞ்சம் மற்றும் பூவார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மற்ற 2 பேரில் ஒருவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இதில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவரும், கேரள நிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்தவரும் ஆட்டோ டிரைவர்கள். பூவாரையைச் சேர்ந்தவர் கார் டிரைவர். ஆட்டோ டிரைவர்கள் 2 பேரும் தேங்காய்பட்டணத்தில் ஆட்டோ ஓட்டி வந்தனர். அவர்கள் சவாரிக்கு காத்திருக்கும்போது கடற்கரைக்கு வரும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளை நோட்டம் போடுவார்கள். அவர்கள் தனியாக செல்வதை பார்த்து மற்றவர்களுக்கு போன் செய்து வரவழைப்பார்கள். பின்னர் 4 பேரும் அங்கு வந்து அவர்களை பின் தொடர்வார்கள்.
காதல் ஜோடிகள் தனிமையை தேடிச் செல்லும்போது காதலனை தனிமைப்படுத்தி பெண்ணை பலாத்காரம் செய்து வந்தனர். இந்த கும்பல் பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications