ரஜோனா தூக்கு தண்டனை: பஞ்சாபில் ஸ்டிரைக்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி அம்மாநிலம் முழுவதும் இன்று முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சீக்கியர்களின் உயரிய மத அமைப்பான அகால்தத் விடுத்துள்ள இந்த முழு அடைப்பால் வர்த்தக நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சீக்கியர்களுக்கே உரிய காவி நிற டர்பன் மற்றும் கொடிகளை ஏந்தியவாறு பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. தொழில்நகரனா லூதியானாவில் அமைதியாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த முழு அடைப்புக்கு அனைத்துக் கட்சிகளும் மட்டுமின்றி தல் கல்சா, கல்சா கூட்டு நடவடிக்கைக் குழு, கல்ரா மிஷன் ஆகிய சீக்கியர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் போலீசாரும் துணை ராணுவப் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1995-ம் ஆண்டு பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரஜோனாவுக்கு 2007-ம் ஆண்டு சி.பி.ஐ.நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. தாம் கொள்கைக்காகப் போராடியதால் தம்மை தூக்கிலிட வேண்டும் என்பது ரஜோனாவின் கருத்து. ஆனால் ரஜோனாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பது சீக்கியர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கை
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications