தடயவியல் அறிக்கை வரும் வரை இத்தாலிய கப்பலை விடுவிக்க கேரள அரசு மறுப்பு
திருவனந்தபுரம்: 2 மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் தடயவியல் அறிக்கை வரும் வரை இத்தாலிய கப்பலை விடுவிக்க முடியாது எனறு உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கொல்லம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி அந்த வழியாக வந்த இத்தாலிய நாட்டு கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் சுட்டனர். இதில் தமிழக மீனவர் உள்பட 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ, ஜிரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தாலிய கப்பலான என்ரிகா லெக்ஸியும் கடந்த 17ம் தேதி முதல் கொச்சி துறைமுகத்தில்பிடித்து வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கிகளை கேரள போலீசார் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்கு முன் கப்பல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.3.10 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால் கப்பலை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்கும்படி கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிது. அதன்படி கேரள அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில் மீனவர்களை சுட பயன்படுத்திய துப்பாக்கி எது என கண்டறிய தடயவியல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன் முடிவு கிடைக்காத வரை கப்பலை விடுவிக்க முடியாது என்று தெரிவித்தது.
இன்னும் ஓரிரு நாட்களில் தடயவியல் அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications