பியாந்த் சிங் கொலையாளிக்கு தூக்கு நிறுத்திவைப்பு-ராஜீவ் கொலையாளிகளுக்கு புது நம்பிக்கை?
டெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்விந்த் சிங் ரஜோனாவுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து கருணை மனு கொடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள் விவகாரத்தில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த 1995ம் ஆண்டு பியாந்த் சிங் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ரஜோனாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்ட்டது. இதை மார்ச் 31ம் தேதி நிறைவேற்றுமாறு கூறி கடந்த 5ம் தேதி சண்டிகர் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து பஞ்சாபில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேற்று குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார். பியாந்த் சிங் கொலையாளிக்கு கருணை காட்டுமாறு கோரி கருணை மனுவை வழங்கினார். இதைப் பெற்றுக் கொண்ட பிரதீபா பாட்டீல், அதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து ரஜோனாவை தூக்கில் போடுவதை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக பாதல் தெரிவித்துள்ளார்.
ரஜோனாவை தூக்கில் போட்டால் பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு கருதுவதாக முன்னதாக குடியரசுத் தலைவரிடம் பாதல் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ராஜீவ் கொலையாளிகளுக்கு புது நம்பிக்கை
ரஜோனா விவகாரத்தால் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரைக் காக்க போராடி வருவோர் தரப்பில் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. ரஜோனாவுக்குக் காட்டிய கருணையைப் போல ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கும் மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், பாதலைப் போலவே, முதல்வர் ஜெயலலிதாவும், குடியரசுத் தலைவரை இதுதொடர்பாக சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளதாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications