300 ஆவணங்களைக் கொடுங்க, அப்பத்தான் தெளிவா பதில் சொல்ல முடியும்: சசி

பெங்களூர்: சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தி்ல ஆஜராகி படு நிதானமாக கேள்விகளுக்குப் பதிலளித்து ஏற்கனவே நீதிபதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் சசிகலா, தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 300 ஆவணங்களைத் தனக்குத் தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நான்கு நாட்கள் வாக்குமூலம் அளித்தார்.
தற்போது சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார். அவரிடம் கேட்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளைத் தயார் படுத்தி வைத்திருந்த அரசுத் தரப்பு சசிகலா பதில் சொல்கிற வேகத்தைப் பார்த்து கடுப்பாகி நிற்கிறது.
ஒவ்வொரு கேள்விக்கும் நிறுத்தி நிதானமாக யோசித்தபடி பதிலளித்து வருகிறாராம் சசிகலா. இது நீதிபதி மல்லிகார்ஜுனாவையே எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில், இன்று சசிகலா பெங்களூர் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது வழக்கறிஞர் ஒரு மனுவை அளித்தார். அதில், வழக்கு தொடர்பான 300 ஆவணங்களை சசிகலாவுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் தெளிவாக பதில் சொல்ல முடியும் என கோரப்பட்டிருந்தது.
இதற்கு அரசுத் தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இது வழக்கை இழுத்தடிக்கும் இன்னும் ஒரு முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை என்றார் அரசு வழக்கறிஞர். மேலும் சசிகலாவின் புதிய மனு தொடர்பான பதில் மனுவை நாளைக்கு தாக்கல் செய்வதாக அரசுத் தரப்பு கூறவே மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications