'மீண்டும் எப்போது போயஸ் தோட்டத்துக்கு'?-சிரித்தபடியே பதில் சொல்லாமல் சென்ற சசிகலா

அவருடன் இளவரசி உள்ளிட்ட ஏகப்பட்ட பேரும் உற்சாகமாக கிளம்பிப் போயுள்ளனராம்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார் சசிகலா. அவரது குடும்பத்தினரும் கூண்டோடு நீக்கப்பட்டனர். இருப்பினும் இளவரசி மீது மட்டும் முதல்வர் ஜெயலலிதா கை வைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த நான்கு மாத காலமாக பெங்களூர் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கில் சமர்த்தாக வாக்குமூலம் அளித்து வந்த சசிகலா நேற்று திடீரென ஒரு பரபரப்பு அறிக்கை விட்டார். அதில் வரிக்கு வரி அக்கா அக்கா என்று ஜெயலலிதா மீது பாச மழை பொழிந்த அவர் அக்காவுக்கு துரோகிகள், எனக்கும் துரோகிகளே, அக்காவுக்கு எதிரிகள், எனக்கும் எதிரிகளே என்று உருக்கமாக கூறியிருந்தார். அக்காவுக்கு மீண்டும் சேவை செய்வேன் என்றும் உணர்ச்சிகரமாக முடித்திருந்தார்.
இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய சசிகலா, நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். வழக்கில் ஆஜராவதற்காக அவர் பெங்களூர் போயுள்ளார். கடந்த காலத்தைப் போல இல்லாமல், இந்த முறை புதுத் தெம்புடன் அவர் காணப்பட்டதாக விமான நிலையத்தில் சசிகலாவை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சசிகலாவுடன் இளவரசி உள்ளிட்டோரும் சென்றனர்.
வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு:
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், இன்று சசிகலா ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இருந்து பெங்களூர் ஹோட்டலில் தங்க வந்த சசிகலாவிடம், எப்போது நீங்கள் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குச் செல்வீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே ஹோட்டலுக்குள் சென்றுவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications