மாஜி பஞ். தலைவரை கொலை செய்யத் தூண்டிய வழக்கு: திவாகரனுக்கு ஜாமீன் மறுப்பு

தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்து உள்ளது ரிஷியூர் கிராமம். அந்த கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருந்தவர் சோம. தமிழார்வன். அவரை சிலர் அரிவாளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் தூண்டுதலின்பேரில் தான் அடையாளம் தெரியாத 3 பேர் தன்னை அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகாரின்பேரில் திவாகரன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வேறு வழக்குகளில் கைதாகி திருச்சி சிறையில் இருக்கும் திவாகரனை மீண்டும் கைது செய்து வலங்கைமானில் உள்ள நீதிபதி செல்வபாண்டி வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி திவாகரனை வரும் 30ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி திவாகரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி செல்வபாண்டி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications