பள்ளிக்கூடத்தை இடிச்சப்ப எங்கே போனீங்க... போலீஸைப் பார்த்து அழுத உதயக்குமார் தாயார்!
நாகர்கோவில்: இப்போது எங்களது வீட்டுக்கு இத்தனை போலீஸார் வந்துள்ளீர்களே, எங்களது பள்ளியை பலமுறை தாக்கி சீரழித்தார்களே, அப்போதெல்லாம் எங்கே போனீர்கள் என்று போலீஸாரைப் பார்த்து கோபமாகக் கேட்டபடி கண்ணீர் விட்டு அழுதார் உதயக்குமாரின் தாயார் பொன்னுமணி அம்மாள்.
நாகர்கோவிலில் உதயக்குமாரின் வீடு உள்ளது. வீட்டின் மாடியில் உதயக்குமார் நடத்தி வரும் சாக்கர் அறக்கட்டளையின் அலுவலகம் உள்ளது. அங்கு இன்று உள்துறை அதிகாரிகள் குழு திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
இதைத் தொடர்ந்து டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் தலைமையில் பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த உதயக்குமாரின் தாயார் பொன்னுமணி வெளியே வந்தார். வெளியே குவிந்து நின்றிருந்த போலீஸாரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதபடி, அன்று எங்களது பள்ளியை அத்தனை முறை தாக்கி இடித்தனரே, அப்போதெல்லாம் நீங்கள் எங்கே போனீர்கள் என்று கேட்டபடி புலம்பினார்.
இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உதயக்குமாரும், அவரது மனைவியும் இணைந்து நடத்தி வரும் சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் தொடர்ந்து விஷமிகளால் தாக்கப்பட்டு வருகிறது. இதுவரை பலமுறை அந்தப் பள்ளியைத் தாக்கி சூறையாடியுள்ளனர். பள்ளியின் சுற்றுச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கூட போலீஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications