குற்றப் பின்னணி கொண்டவர்கள் இருக்கும் நாடாளுமன்றத்தை எப்படி மதிப்பது?: கெஜ்ரிவால்

நாடாளுமன்றத்தை அவமதித்ததாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பியுள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை ஒரு சில எம்பிக்களின் மீது மட்டும்தான் எனக்கு மதிப்பு உண்டு என்றும் அதில் கூறியுள்ளார்.
குற்றப்பின்னணி உடைய 162 எம்பிக்களை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து அதை அவமதிக்கச் செயததில் அனைத்துக் கட்சிகளுக்கும்தான் பொறுப்பு உள்ளதே தவிர தமக்கு அல்ல என்பதும் கெஜ்ரிவாலின் பதில்.
ரயில் விபத்து ஒன்று நடைபெற்ற போது லால்பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நாடாளுமன்றம் ஒன்று இருந்தது. அதுபோல ஒரு நாடாளுமன்றத்துக்கு தியாகம் செய்ய விரும்புகிறேன். ஆனால் இப்போதுள்ள நாடாளுமன்றத்தை எப்படி மதிக்க முடியும் என்கிறார் கெஜ்ரிவால்..
பொது சேவை என்றால் என்னவென்றே தெரியாத தொழிலதிபர்கள் பல்வேறு கட்சிகளின் உதவியுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிடுகின்றனர் என்றும் தங்களின் வர்த்தக நலனுக்காக அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றனர். இது நாடாளுமன்றத்தை தவறாக பயன்படுத்துவது ஆகாதா? இது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகாதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications