திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் திடீர் மழை: இடி தாக்கி 2 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று காலையில் பலத்த காற்றுடன் திடீரென மழைப் பெய்தது. அப்போது இடி தாக்கியதில் 2 பேர் பலியாகினர்.
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையி்ல் இன்று அதிகாலையில் பலத்த காற்று வீசியது. காலை 6 மணி அளவில் திடீர் இடியுடன் கூடிய மழைப் பெய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்து இடி, மின்னலுடன் பெய்த மழை அரை மணி நேரத்திற்கு நீடித்தது. இதனால் காலையில் கூலி வேலைக்கு சென்ற பணியாளர்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கினர்.
இந்த நிலையில் பெரியகுளத்தை சேர்ந்த கூலி தொழிலாளர் சந்திரன், முனிசாமி, சுந்தரமூர்த்தி ஆகியோர் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கினர். அப்போது அவர்கள் நின்ற பகுதியில் பலத்த இடி தாக்கியது. இதில் படுகாயமடைந்த 3 பேரில் சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மழைக்காக சோமாசிபாடி அருகே உள்ள மரத்தடியில் ஒதுங்கிய கடம்பை கிராமத்தை சேர்ந்த துரைசாமி மீது இடி தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காலையில் மழைப் பெய்தால் இன்று வெயிலின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications