தமிழகத்தில் தலைதூக்கும் ஸ்வைன்: மாநிலம் முழுவதும் தடுப்பூசி போட ஏற்பாடு

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு 75 வயது விவசாயி கந்தசாமி என்பவர் பலியானார். சென்னையில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகளில் முதல் கட்டமாக பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 3 மாதங்களில் 15 பேருக்கு பன்றிக் காய்யச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் பலியானார். பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் டேமி ப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மட்டும் 4 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்ட மருத்துவமனைக்களுக்கும் டேமி ப்ளூ மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை மையமும், சிகிச்சைக்காக தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications