7ம் தேதி வங்கிகளுக்கு முழு வேலை நாள்: மத்திய அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Bank
டெல்லி: மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளிக்காக வரும் 5, 6 ஆகிய தேதிகள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வரும் 7ம் தேதி வங்கிகள் அனைத்தும் முழு நாளும் இயங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாளை(5ம் தேதி) மகாவீர் ஜெயந்தி என்பதால் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நாளை மறுநாள்(6ம் தேதி) புனித வெள்ளி என்பதால் அன்றும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 மற்றும் 6 ம் தேதிகளில் வங்கி பணிகள், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் நடைபெறாது.

ஆனால் ஏ.டி.எம். மூலம் நடைபெறும் பணப்பட்டுவாடாவில் தடங்கல் ஏதும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டுமே அதாவது காலை 10 மணி முதல் 1 மணி வரை தான் இயங்கும். ஆனால் 5 மற்றும் 6ம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடபப்ட்டுள்ளதால் வரும் சனிக்கிழமை(7ம் தேதி) அனைத்து வங்கிகளும் முழு நாளும் இயங்க வேண்டும் என்று வங்கிளுக்கு மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த 2ம் தேதி ஆண்டு கணக்கு முடிப்புக்காக வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது, மேலும் நாளையும், நாளை மறுநாள் விடுமுறையையும் சேர்த்து இந்த வாரத்தில் மட்டும் வங்கிகளுக்கு 3 நாட்கள் விடுமுறையாகும். அதனால் தான் வரும் 7ம் தேதி முழு வேலை நாள் என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+