ராமஜெயத்தை கடைசியாகப் பார்த்த பால்காரர், ரிடையர்ட் ஜட்ஜ்

திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராமஜெயம் கடந்த 29ம் தேதி காலை வாக்கிங் போனபோது கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்தனர்.
ராமஜெயம் தான் நேருவின் பல பணிகளை முன்னின்று பார்த்து வந்தார். இதனால் நேருவின் அரசியல் எதிரிகள், ராமஜெயத்திற்கும் எதிரிகளாக இருந்து வந்தனர். எனவே நேருவின் அரசியல் எதிரிகளால் ராமஜெயம் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று சந்தேகம் இருந்து வந்தது.
பின்னர் இது ராமஜெயத்தால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட்காரர்கள் ஒன்று சேர்ந்து கூலிப்படையினரை வைத்துக் கொலை செய்திருக்கலாமோ என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அதுவும் பின்னர் மறைந்து தற்போது பெண் விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக புதிய தகவல் பரவ ஆரம்பித்துள்ளது.
முன்னதாக முதல் நாள் இரவே ராமஜெயத்தை கடத்தி அதிகாலை 3 மணிக்கு அவர் கொலல்ப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் கடந்த 29ம் தேதி காலை வாக்கிங் போனபோது தான் கடத்திக் கொல்லப்பட்டார் என்பதை போலீசார் தற்போது உறுதி செய்துள்ளனர்.
அதிகாலை 5.15 மணியளவில் ராமஜெயத்தை ரயில் நிலைய ரோட்டில் பார்த்ததாக டீக்கடைக்காரர் ஒருவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் ஊற்றும் வியாபாரி ஒருவரும், தினமும் வாக்கிங் போகும் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் சம்பவம் நடந்த அன்று காலை ராமஜெயத்தை பார்ததாக போலீசில் தெரிவித்துள்ளனர்.
அந்த பால் வியாபாரி காலையில் வாக்கிங் போகும் ராமஜெயத்தை தினமும் பார்த்து வணக்கம் சொல்லும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்றும் அவர் வணக்கம் சொல்லியிருக்கிறார். காலை வாக்கிங் போனவரை கோட்டை ஸ்டேசன் ரோட்டில் வைத்தோ அல்லது வேறு இடத்தில் வைத்தோ தலையின் பின்புறம் தாக்கி மயங்கச் செய்து கூலிப்படையினர் காரில் கடத்தி கொன்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த கொலை குறித்து ராமஜெயத்தின் மனைவி, குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என சுமார் 100 பேரிடம் தனிப்டை விசாரணை நடத்தியுள்ளது. அதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ராமஜெயத்தின் உடல் கிடந்த இடத்திற்கும், கூலிப்படை சென்ற கும்பகோணத்தான் சாலை, திருவாளர்சோலை பகுதிக்கும் இன்று மீண்டும் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. போலீசார் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications