விளையாட யாரும் வராததால், தானே களமிறங்கி ஆடிய கலெக்டர் சம்பத்
விழுப்புரம் : அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க பலரும் வராத காரணத்தால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடைபெற்றது. 32 வகையான போட்டிகளை மாவட்ட கலெக்டர் சம்பத் துவக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் விளையாட்டு போட்டியை துவககி வைக்க மாவட்ட கலெக்டர் சம்பத் வந்தார்.
அப்போது, அங்கு, 32 வகையான போட்டிகளுக்கு 6 பெண்கள் உட்பட 38 பேர் மட்டுமே மைதானத்தில் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க 70 கோப்பைகள் தயாராக இருந்தது. இதைக் கண்டு கலெக்டர் சம்பத் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து போட்டியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தானே இறங்கிப் போட்டியிட்டார். இதில், சம்பத் 4 வது இடத்தை பிடித்தார்.
அதே போல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுபோத் குமார் 2 வது இடத்தை பிடித்தார். பெரும்பாலான போட்டியில் ஒருவர் மற்றும் 2 பேர் மட்டும் பங்கேற்றனர். இதனால் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
மீதமிருந்த கோப்பைகள் பத்திரமாக அரசு அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications