நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவில் மீண்டும் முரளி மனோகர் ஜோஷி-திமுக சார்பில் இளங்கோவன்
டெல்லி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) புதிய உறுப்பினராக, அந்தக் குழுவின் இப்போதைய தலைவரான பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுகணக்குக் குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 10 பேரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, புதிதாக லோக்சபா எம்.பிக்கள் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வரும் மே மாதம் முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தக் குழு செயல்படும்.
இப்போது உறுப்பினர்களாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான ஜெகதாம்பாள், கே.சுதாகரன், கே. சாம்பசிவ ராவ் மற்றும் ரேவதி ரமண் சிங் (சமாஜ்வாடி கட்சி), ஆதிசங்கர் (திமுக) ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இவர்களுக்குப் பதிலாக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், அசோக் தன்வார், சர்வே சத்யநாராயணன், தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாடி கட்சி), டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் தரூர் மற்றும் இளங்கோவன் ஆகியோர் புதுமுகங்கள் ஆவர். இதேபோல், பொதுக்கணக்குக் குழுவுக்கு ராஜ்யசபாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 7 உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இந்தக் குழு 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications