யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களுக்குள் புகுந்து சிங்களர்கள் தாக்குதல்: தேர்கள் சேதம்
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து கோவில்களுக்குள் புகுந்து கடவுள் சிலைகளை சிங்களர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததில் இருந்து இலங்கையில் வாழும் தமிழர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்தபோதிலும் அங்குள்ள தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கடந்த வாரம் மட்டக்களப்பில் உள்ள இந்தியாவின் தேசப்பிதாவான மகாத்மா காந்தி மற்றும் 2 தமிழ் அறிஞர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. முன்னதாக தமிழர்கள் அதிகம் செல்லும் சிவன் கோவிலுக்குள் புகுந்த சிங்கள ராணுவம் அங்குள்ள புத்தர் சிலையைக் கேட்டு ரகளையில் ஈடுபட்டது. மேலும் சாமி கும்பிட வந்த தமிழ் பக்தர்களை அடித்து விரட்டியது.
யாழ்ப்பாணம் பகுதியில் ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள கோப்பாய், பிரான் பற்று பிரதேசத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குள் புகுந்த சிங்களர்கள் அங்கிருந்த 2 சுவாமி வாகனங்களை சேதப்படுத்தினர்.
இதேபோன்று அச்செழு பகுதியில் உள்ள இந்து கோவிலுக்குள்ளும் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சாமி வாகனங்களை சேதப்படுத்தினர்.
பட்டப்பகலில் நடந்த இந்த அத்துமீறல் குறித்து புகார் கொடுத்தும் பலனில்லை. போலீசார் வழக்குப் பதியவும் செய்யவில்லை. அண்மை காலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதோடு சாமி சிலைகள் திருடுபோவதாக அப்பகுதி இந்துக்கள் கவலை தெரிவித்தனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications