குஜராத் குல்பர்க் சொசைட்டி வன்முறை: மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை- விசாரணை குழு

இத் தகவலை அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரியிடம் 30 நாட்களுக்குள் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் ஏற்பட்ட வன்முறையில் குல்பர்கா சொசைட்டியில் 69 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஜகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கில், வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியையும் மேலும் 57 பேரையும் குற்றவாளியாக சேர்த்திருந்தார்.
ஆனால், இது குறித்து விசாரணை நடத்திய ஆ.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு, இதில் மோடிக்கும் 57 பேருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று கூறி, இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அகமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பட் இன்று அறிவித்தார்.
மேலும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் அனைத்து ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் ஜாகியா ஜாப்ரியிடம் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
மோடியின் பெயரைக் கெடுக்க முயல வேண்டாம்-பாஜக:
இந் நிலையில் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ள பாஜக, கலவரத்தை காரணமாக வைத்து முதல்வர் நரேந்திர மோடியின் பெயரைக் கெடுக்க முடியாது என்று கூறியுள்ளது.
இக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், நடந்த கலவரங்கள் துரதிஷ்டவசமானவை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், கலவரங்களைக் காரணமாக வைத்து நரேந்திர மோடியின் பெயரைக் கெடுக்க முயலக் கூடாது என்றார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications