மன்னார்குடி: டி.ஆர்.பாலு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது: மக்கள் பேரணி

கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்யில் அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு குடும்பத்தினர், மன்னார்குடி அருகே வடசேரி கிராமத்தில் எரிசாராய ஆலையைத் துவங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட பெரும் கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
எரிசாராய ஆலையை நிறுவக்கூடாது என்றும், விவசாயம் பாதிக்கும் என்றும், குடிநீர் பிரச்னை ஏற்படும் என்றும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்றும், சுகாதாரக்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் வரும் என்றும் பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டது. ஆனால் இதை எல்லாம் காதில் வாங்காத ஆட்சியாளர்கள் பொதுமக்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துவிட்டு எரிசாராய ஆலை பணிகளை முடுக்கிவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தாக்கப்பட்ட ஏப்ரல் 9 தேதியை ஒவ்வொரு ஆண்டும் கறுப்பு தினமாகக் கடைப்பிடித்து, டி.ஆர்.பாலுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எரிசாராய ஆலையை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
அதன்படி வடசேரி பஞ்சாயத்து தலைவர் கண்ணதாசன், முன்னாள் சமூகநீதிக் கட்சி நிறுவனர் ஜெகவீரபாண்டியன், வடசேரி திமுக அவைத் தலைவர் சங்கர், திமுக நகரச் செயலாளர் ஞானசேகரன் மற்றும் மதிமுக, தேமுதிக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலரும் நேற்று ஆர்பாட்டம் நடத்தினர். மேலும் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடியை ஏற்றி வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், பேரணி மற்றும் கடையப்பு நடத்தினர்.
இந்த நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று எரிசாராய ஆலையை மூட தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications