12-ம் வகுப்பு தேர்வு: முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது..
கடந்த மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 8.2 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணி 47 மையங்களில் மாநிலம் முழுவதும் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியரல்லாத பணியாளர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகியவற்றின் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. இப்பாடங்களுக்கான விடைத்தாள்களுக்கு டம்மி எண் வழங்கப்பட்டு மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.. விடைத்தாள்களை திருத்திய பிறகு, அந்த விடைத்தாள்களில் உள்ள டம்மி எண்ணுக்குரிய தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி, கணினியில் மேற்கொள்ளப்படும்.
அனைத்து விடைத்தாள்களையும் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் திருத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்கள்
முதல் முறையாக பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மே இறுதி வாரத்தில் மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications