பாதுகாப்புக் கோரி புதுச்சேரி நீதிபதியிடம் சங்கரராமன் மனைவி மனு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் ஆஜராயினர்.
இன்று வழக்கறிஞர்கள் வாதம் நடந்தது. அப்போது சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் திடீரென நீதிமன்றத்துக்கு வந்தனர்.
பத்மாவிடம் ஏற்கனவே சாட்சி விசாரணை முடிந்துவிட்ட நிலையில் அவர் நீதிமன்றத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் அவர் திடீரென நீதிமன்றத்துக்கு ஒரு மனுவோடு வந்தார்.
நீதிமன்ற ஊழியர்களை சந்தித்த அவர், நான் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி முருகனை சந்திக்க வேண்டும் என்றார். ஆனால் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இப்போது அவரை சந்திக்க முடியாது என்று ஊழியர்கள் கூறிவிட்டனர்.
ஆனாலும் பத்மாவும், அவருடைய மகனும் நீதிமன்றத்தின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தந்தனர். பின்னர் நீதிபதியை சந்தித்த அவர்கள், தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி மனு அளித்தனர்.
கடந்த ஆண்டு பத்மா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், இந்த வழக்கில் தன்னை பொய் சாட்சி சொல்லுமாறு சிலர் மிரட்டுவதாகவும், தனது மகன், மகளை ஆசிட் டேங்கரில் போட்டு உருத் தெரியாமல் அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications