24ல் ஹரியானா அமைச்சர் மகனை கைபிடிக்கும் லாலுவின் 5வது மகள்
பாட்னா: ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் 5வது மகள் அனுஷ்காவுக்கும், ஹரியானா மாநில மின்சாரத்துறை அமைச்சர் அஜய் சிங் யாதவின் மகன் சிரஞ்சீவ் ராவுக்கும் வரும் 24ம் தேதி திருமணம் நடக்கிறது.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அதில் 5வது மகள் அனுஷ்காவுக்கும், ஹரியானா மாநில மின்சாரத்துறை அமைச்சர் அஜய் சிங் யாதவின் மகன் சிரஞ்சீவ் ராவுக்கும் வரும் 24ம் தேதி திருமணம் நடக்கிறது.
திருமண சடங்குகள் வரும் 18ம் தேதி முதல் நடக்கின்றன. திருமணத்தையொட்டி தெற்கு ஹரியானாவில் உள்ள அஜய் சிங்கின் சொந்த ஊரான ரேவாரியில் இருந்து டெல்லிக்கு திருமண ஊர்வலம் நடக்கிறது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
அஜய் சிங் ரேவாரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது மகன் சிரஞ்சீவ் ஹரியானா மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார்.
லாலுவின் 4வது மகள் ராகினிக்கும் சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த காசியாபாத் எம்.எல்.ஏ. ஜிதேந்திர யாதவின் மகன் ராகுலுக்கும் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications