இலங்கையில் காந்தி சிலை உடைப்பு: இந்தியா கண்டனம் தெரிவிக்காதது வெட்கக்கேடானது- வைகோ
சென்னை: இலங்கையில் மகாத்மா காந்தியின் சிலை, தமிழ் அறிஞர்கள் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழத்தமிழ்க் குழந்தைகள், பெண்களை ஈவு இரக்கம் இன்றி வதைத்துக் கொன்று குவித்துக் கோர தாண்டவம் ஆடிய சிங்களப் பேரினவாத அரசும், மிருகங்களை விடக் கொடிய இனவெறியர்களும், தொடர்ந்து தமிழர்களுக்குக் கொடுமைகள் செய்து வருகிறார்கள்.
மகாத்மா காந்தி, உலக சாரணர் இயக்க நிறுவனர் இராபர்ட் பேடன்பாவல், விவேகானந்தர், தமிழ் அறிஞர்கள் விபுலானந்தர், புலவர் மணி பெரியதம்பி பிள்ளை ஆகியோருடைய சிலைகளை உடைத்து நொறுக்கி உள்ளனர். இலங்கையில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கை, கால்களை உடைத்து நொறுக்குவேன் என்று இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.
லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர்களுடைய வெறி இன்னமும் அடங்கவில்லை; சகிப்புத்தன்மை இம்மி அளவேனும் இல்லை என்பதையே இச்சிலை உடைப்புச் சம்பவங்கள் அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன; சிங்களப் பேரினவாதத்தின் கோர முகம் உலகத்தின் கண்களுக்கு அம்பலமாகிக் கொண்டு இருக்கின்றது.
இப்போது அல்ல 28 ஆண்டுகளுக்கு முன்பே, அவர்கள் இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள். 1984ம் ஆண்டு இந்திரா அம்மையார் சுட்டுக்கொல்லப்பட்டபோது, ஈழத்தமிழர்கள் அவரது படத்துடன் இரங்கல் ஊர்வலம் சென்றனர். சிங்கள வெறியர்கள் அந்தப் படத்தைப் பிடுங்கி உடைத்து நொறுக்கியதுடன், ‘இனி உங்களைக் காப்பாத்த உங்க ஆத்தா வருவாளாடா?’ என்றும் கேட்டு வசைமாரி பொழிந்தனர். யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தார்கள்.
இத்தகைய கொடுஞ்செயல்களுக்கெல்லாம் மூல காரணமான சிங்கள இனவாத அரசின் சுயரூபத்தை, உண்மைத் தோற்றத்தை, இந்தியாவில் உள்ள மக்கள், அரசியல் கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தச் சிலை உடைப்புச் சம்பவங்களுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது, வெட்கக்கேடானது.
மகாத்மா காந்தி சிலையும், தமிழ் அறிஞர்களின் சிலைகளையும் சிங்கள இனவெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு உடைத்து நொறுக்கிய சிங்கள அரசுக்கு, மதிமுக சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications