தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது!
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளிலும் உட்புறப் பகுதிளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் பீதி காணப்பட்டது.
இந்தோனேசியாவில் இன்று 8.9 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையின் கடலோரப் பகுதிகள் அனைத்திலும் நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது. இந்தப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், வீடுகள் அதிர்ந்தன. வாகனங்கள் ஆடின. இதனால் மக்கள் வெளியேறினர்.
டைடல் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளிலும் கட்டடங்கள் அதிர்ந்துள்ளன. அதேபோல கோடியக்கரை, தரங்கம்பாடி உள்பட பல கடலோரப் பகுதிகளிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலும் பல கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதேபோல திருச்சி உள்ளிட்ட உட்புற மாவட்டங்களிலும், ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களிலும் கூட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications