களை கட்டியது தமிழ் புத்தாண்டு: பொன்னேறு பூட்டிய விவசாயிகள்!

நந்தன தமிழ்புத்தாண்டு நலமாய் இருக்க சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை மாவிலைத் தோரணங்களினால் அலங்கரித்திருந்தனர். அதிகாலையிலையே குளித்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
பொன்னேறு திருவிழா
சித்திரை முதல்நாள் கிராமங்களில் பொன்னேறு பூட்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள சுரக்காப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் வீடுகளில் இருந்த காளைகளை அலங்கரித்து கலப்பையினை நன்றாக கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்தனர்.
பின்னர் காளைகளில் பூட்டி இந்த ஆண்டு விவசாயம் நன்றாக செழிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி தங்களின் நிலத்தில் மூன்று முறை உழுதனர். இதனையடுத்து காளைகளுக்கும், கலப்பைக்கும் கற்பூர தீபம் காட்டப்பட்டது.
இதனையடுத்து இறைவனுக்கு படைக்கப்பட்டிருந்த கப்பியரிசியை அனைவருக்கும் பிரசாதமாக அளித்தனர். கப்பியரிசி என்பது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து வெல்லம், பொட்டுக்கடலை, சேர்த்து கலக்கப்பட்டதாகும்.
இதனையடுத்து ஏரிலிருந்து காளைகளை அவிழ்த்து... கலப்பை, மாடுகளையும்,படையல் பொருட்களையும் வீட்டிற்கு கொண்டுவந்து பத்திரப்படுத்தினர். வருடத்தின் முதல்நாள் இவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பது தமிழக விவசாயிகளின் பாரம்பரியம் மிக்க நம்பிக்கையாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications