சுஷ்மா தலைமையில் இலங்கை புறப்பட்டுச் சென்றது இந்திய எம்.பிக்கள் குழு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக, அதிமுக, மதிமுக, சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் என தமிழகத்தின் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த யாருமே இல்லாத நிலையில், 10 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு இன்று இலங்கை புறப்பட்டுச் சென்றது. இந்தக் குழுவில் 11வது நபராக பாஜக மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கிச் சென்றுள்ளார்.

முதலில் இக்குழுவில் 14 பேர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் 4 பேர், சிபிஎம் சார்பில் ஒருவர், திமுக, அதிமுக சார்பில் தலா ஒருவர் என 7 பேர் இடம் பெற்றனர். இந்த நிலையில், அதிமுக இக்குழுவிலிருந்து விலகுவதாக முதலில் அறிவித்தது. இதையடுத்து திமுகவும் நேற்று விலகி விட்டது. இதனால் குழுவின் எண்ணிக்கை 12 ஆக சுருங்கியது.

இன்று மேலும் 2 பேர் விலகினர். இதனால், குழு எண்ணிக்கை 10 ஆக குறைந்து விட்டது.

அதேசமயம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய முக்கிய தமிழக கட்சிகளுக்கு குழுவில் இடம் தரப்படவில்லை. கேட்டால், அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று மத்திய அரசு கூறி விட்டது. இதனால் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனால் மத்திய அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸின் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக் தாகூர், சிபிஎம் கட்சியின் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இக்குழுவினர் டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இலங்கைத் தலைநகர் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இன்று கொழும்பு சென்றடையும் இவர்கள் ஓய்வுக்குப் பின்னர் நாளை 17-ந் தேதி காலை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிசையும், இலங்கை பொருளாதார வளர்ச்சி அமைச்சரும், ராஜபக்சேவின் தம்பியுமான பசில் ராஜபக்சேவையும் சந்தித்து பேசுகிறார்கள்.

சபாநாயகருடன் முதல் விருந்து

எம்.பி.க்கள் குழுவுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.கந்தா விருந்தளிக்கிறார். அதன் பிறகு வடக்கு பகுதியில் ரெயில்வே சார்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் மெடவாச்சியா செல்கிறார்கள். முல்லைத் தீவு பகுதியையும் பார்வையிடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் இரவு தங்கல்

யாழ்ப்பாணத்துக்கும் சென்று தமிழ் எம்.பி.க்களையும், மனித உரிமைசங்க பிரதி நிதிகளையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இரவு தங்குகிறார்கள்.

ஏப்ரல் 19-ந்தேதி காங்கேசன்துறை துறைமுகம் செல்கிறார்கள். அங்கு இந்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள். காங்கேசன்துறை துறைமுகத்துக்கும், தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையே வர்த்தக தொடர்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரனிலுடன் சந்திப்பு

அதே நாளில் குலதாராவில் தென்னக ரெயில்வே சார்பில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட பின்பு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ரம சிங்கேயை சந்தித்து பேசுகிறார்கள்.

கருணா கட்சி பிள்ளையானுடன் சந்திப்பு

20-ந்தேதி கிழக்கு மற்றும் மலை பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களை சந்திக்கிறார்கள். சமீபத்தில் காந்திசிலை உடைக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதிக்கும் சென்று மாகாண முதல்வரான பிள்ளையானை சந்தித்து பேசுகிறார்கள்.

21ம் தேதி ராஜபக்சேவுடன் இறுதி விருந்து

21-ந்தேதி காலை ராஜபக்சேவை எம்.பி.க்கள் குழு சந்திக்கிறது. அவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்கள்.

தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குழு போவதாகத் தெரியவில்லை. மேலும் முள்வேலி முகாமில் இன்னும் கூட அடைபட்டிருக்கும் தமிழர்களையும் இவர்கள் பார்ப்பதாக நிகழ்ச்சி நிரலில் இல்லை. பாதிக்கப்பட்ட தமிழர்கள் யாரையும் இவர்கள் பார்ப்பார்களா என்றும் தெரியவில்லை. போர் நடந்த பகுதிகளுக்கும் இவர்கள் போவதாகத் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+