For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை செல்லும் குழுவிலிருந்து திரினமூல், ஐக்கிய ஜனதாதளமும் விலகல்

Google Oneindia Tamil News

Shivanand Tiwari and Sucharu Ranjan Haldar
டெல்லி: இலங்கைக்கு செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு மேலும் பலவீனமாகியுள்ளது. இக்குழுவிலிருந்து தற்போது திரினமூல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவையும் வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 10 ஆக சுருங்கிப் போய் விட்டது.

சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்லவுள்ளது. இந்தக் குழுவிலிருந்து ஏற்கனவே அதிமுக, திமுக ஆகியவை வெளியேறி விட்டன. இதனால் குழுவின் எண்ணிக்கை 14 என்பதிலிருந்து 12 ஆக குறைந்து விட்டது.

இந்த நிலையில் திரினமூல் காங்கிரஸும், ஐக்கிய ஜனதாதளமும் இன்று விலகி விட்டன. திரினமூல் சார்பில் சுசாரு ரஞ்சன் ஹல்தாரும், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சிவானந்த திவாரியும் போவதாக இருந்தது. ஆனால் இருவரும் போகவில்லை. இதனால் குழுவின் எண்ணிக்கை தற்போது 10 ஆக சுருங்கிப் போய் விட்டது.

இந்த பத்துப் பேரில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. மற்றவர்கள் வட மாநில எம்.பிக்கள் ஆவர்.

English summary
Two more MPs have deserted Indian delegation to Sri Lanka today. TMC and JDU have withdrawn from the team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X