முருகானந்தம் கொலை வழக்கில் ராமதாஸ் சகோதரருக்கு ஜாமீன்
சென்னை: தமிழக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் கொலை வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் சகோதரர் சீனிவாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திண்டிவனத்தில் 2006-ம் ஆண்டு முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சீனிவாசன் உட்பட 11 பேர் சிறையில் உள்ளனர்.
முருகானந்தம் கொலை வழக்கில் ராமதாஸிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் உள்ள சீனிவாசன் உட்பட11 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. சீனிவாசன் உட்பட 11 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி முன் 11 பேரும் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications