ஆஸ்திரேலியாவில் பூட்டிய வீட்டில் தாயின் சடலத்துடன் 5 நாட்கள் இருந்த குழந்தை

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இறந்த தாயின் உடலுடன் 2 வயது குழந்தை சுமார் 5 நாட்களை கழித்துள்ளது.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ளது வாகா, வாகா. அங்குள்ள ஒரு வீடு சில நாட்களாக திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்தவுடன் அந்த வீட்டுக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு 30களில் உள்ள ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. அதன் அருகிலேயே 2 வயது பெண் குழந்தை மயங்கிக் கிடந்தது. போலீசார் குழந்தையை மீட்டு சிகி்ச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

5 நாட்களாக வீடு திறக்காமல் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவி்த்தனர். அந்த 5 நாட்களும் குழந்தை இறந்த தாயின் உடல் அருகே இருந்துள்ளது. வீட்டில் இருந்த ஈஸ்டர் கேக்குகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மோசமான நிலைமையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த குழந்தையின் தாய் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+