அயோத்தி ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம்: நீதிபதிக்கு மர்ம மிரட்டல் கடிதம்
லக்னோ: ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராமவிரகாஷ் யாதவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் உள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக அந்த கோவிலுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ராமர் கோவிலையும், மாவட்ட நீதிமன்றத்தையும் வெடிகுண்டு வைத்து தகர்த்தப் போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராம்விரகாஷ் யாதவுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.
அந்த கடித்தத்தில் ராமஜென்ம பூமி வளாகத்தையும், மாவட்ட நீதிமன்றத்தையும் குண்டு வைத்து தகர்க்கப்போவதாக யாரோ கையால் எழுதி சாதாரண தபாலில் அனுப்பியுள்ளனர். நீதிபதி யாதவ் அந்த கடித்தத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து ராமர் கோவிலுக்கும், மாவட்ட நீதிமன்றத்திற்கும் பாதுகாப்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து பைசாபாத் டி.ஐ.ஜி. பானுபாஸ்கர் கூறுகையில்,
ராமர் கோவிலைத் தகர்க்கப்போவதாக அடிக்கடி மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. இதுவரை வந்துள்ள எந்த ஒரு கடிதத்தையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.
கடந்த மாதம் ராமநவமியின்போது ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் வந்தது. இந்த 2 கடிதகங்களையும் எழுதியது ஒரு நபரா என்று அவற்றை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறோம். முதலில் வந்த கடிதத்தில் அப்துல் கரீம் என்ற பெயர் இருந்தது. அது மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் இருந்து வந்தது. அந்த கடிதத்தை எழுதிய உண்மையான நபர் இன்னும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications