கூடங்குளம் 3, 4வது அணு உலைப் பணிகளை தொடங்க 35 பஞ்சாயத்து தலைவர்கள் கோரிக்கை!
நெல்லை: கூடங்குளத்தி்ல் 3வது, 4வது அணு உலைக்களுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று 35 பஞ்சாயத்து தலைவர்கள் இந்திய அணு சக்தி தலைவர் ஜெயினை இன்று சந்தித்து வலியுறுத்தவிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலை மூலம் விரைவில் உற்பத்தியை தொடங்குவதற்காக ஊழியர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
முதல் அணு உலையில் உற்பத்தியை தொடங்கிய பிறகு இரண்டாவது அணு உலையின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கிடையே கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 3வது, 4வது அணு உலைகளின் பணிகளையும் உடனே தொடங்க வேண்டும் என்று இந்திய அணு சக்தி கழக தலைவர் ஜெயினை இன்று சந்தித்து வலியுறுத்த கூடங்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 35 தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அணு உலை ஆதரவு இயக்க தலைவர் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம், செட்டிகுலம் பகுதியைச் சேர்ந்த 13 கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.500 கோடியில் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதற்கான பட்டியல் அந்தந்த பஞ்சாயத்துகளின் சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 13 பஞ்சாயத்துகள் தவிர்த்து எஞ்சியுள்ள ராதாபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 35 பஞ்சாயத்து தலைவர்களும் அணு விஜய் நகரியத்தில் அணு சக்தி கழக தலைவர் ஜெயினை இன்று சந்திக்க முடிவு செய்துள்ளனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications