கமுதி அருகே வேலைக்கு சென்ற நர்ஸ் மாயம்: ஆட்டோ டிரைவருக்கு வலை
கமுதி: கமுதி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த நர்சுடன் மாயமான ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமம் போலீஸ் சரகம் விரதக்குளத்தைச் சேர்ந்த விவசாயி கார்த்திகைச்சாமியின் மகள் சங்கீதா(19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள அவர் அபிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலைக்குப் போன சங்கீதா திடீர் என்று மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
சங்கீதா கிடைக்காததால் அவரது தந்தை கார்த்திகைச்சாமி போலீசில் புகார் கொடுத்தார்.
அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
வேலைக்கு சென்ற எனது மகள் சங்கீதாவை அபிராமம் அருகே உள்ள விக்கிரஉடைப்பைச் சேர்ந்த முனியசாமி மகன் ஆட்டோ டிரைவர் அண்ணாத்துரை(21) என்பவர் தனது உறவினர் பாண்டி(35) என்பவரின் உதவியோடு 50 பவுன் நகை மற்றும் ரூ.30,000 பணத்துடன் கடத்திச் சென்றுவிட்டார். எனவே, எனது மகளைக் கண்டடுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மதியழகன், எஸ்.ஐ. லட்சுமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சங்கீதாவையும், அண்ணாத்துரையையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications