கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கடையநல்லூர்: கடையநல்லூரில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியானது மக்களை பீதியடையச் செய்துள்ளது.
கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாகும். இங்கு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2009ம் ஆண்டு திடீரென பரவிய மர்ம காய்ச்சலுக்கு 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மர்ம காய்ச்சலுக்கு சிலர் உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு மதுரை, புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர்.
அத்துடன் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் ராட்சத கொசு ஒழிப்பு இயந்திரம் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளிலும் கொசுக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கடையநல்லூர் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையநல்லூர் காயிதே மில்லத் தெருவில் வசித்து வரும் அப்துல் மஜீத் என்பவரது மனைவி ரஹிமாள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். தற்போது 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண் பலியானது மக்களை பீதியடையச் செய்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications