ஆயுதங்களை ஒப்படைக்கின்றனர் முட்டம் மீனவர்கள்..
முட்டம்: கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் மீனவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
முட்டம் மீனவர்கள் கிராமத்தில் கிறிஸ்துவ பங்குப் பேரவைத் தேர்தலையொட்டி இரு பிரிவுகளாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்துவ பண்டிகைக் காலங்களில் இந்த மோதல் அதிகரித்துவிடுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனால் பல மீனவர்கள் ஊரைவிட்டே வெளியேறும் நிலையும் ஏற்பட்டது.
அண்மையில் முட்டம் கிராமத்திலிருந்து ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் நாகர்கோவிலில் அமைச்சர் பச்சைமால் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். காவல்துறை அதிகாரிகளும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைக்க மீனவர்கள் ஒப்புக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications