சட்டிஸ்கரில் 8 தமிழ் கலெக்டர்கள்- அத்தனை பேருக்கும் பலத்த பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

Collector Alarmelmangai
சென்னை: சட்டிஸ்கர் மாநிலத்தில் அலெக்ஸ் பால் மேனனையும் சேர்த்து மொத்தம் 8 மாவட்டங்களில் கலெக்டர்களாக தமிழர்கள் உள்ளனர். இவர்கள் தவிர மேலும் 1 5 தமிழக அதிகாரிகளும் முக்கிய உயர் பதவிகளும் உள்ளனர். அலெக்ஸ் கடத்தலைத் தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் அத்தனை கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சட்டிஸ்கரில் மொத்தம் 27 மாவட்டங்கள் உள்ளன. இதில் 8 மாவட்டங்களில் கலெக்டர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் அலெக்ஸும் ஒருவர். மேலும் அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆவார்.

கலெக்டர்களாக உள்ள பிற தமிழர்கள் - பாரதிதாசன், ஆர்.பிரசன்னா, சி.ஆர்.பிரசன்னா, அன்பழகன், அலர்மேல் மங்கை, பிரகாஷ், ரஜத்குமார் ஆவர். இவர்களில் அன்பழகனும், அலர்மேல் மங்கையும் கணவன், மனைவி ஆவர்.

இவர்கள் தவிர கோர்பா மாவட்ட எஸ்.பியாக தமிழகத்தின் சுந்தரராஜ் இருக்கிறார். இவர் தவிர பிற ஐஏஎஸ் அதிகாரிகளான ஆர்.சங்கீதா, பி.சங்கீதா, தேவசேனாபதி, வன அதிகாரிகளாக அருண் பிரசாத், வெங்கடாசலம், மாதேஸ்வரன் ஆகியோர் உள்பட 14 தமிழக அதிகாரிகள் பல்வேறு அரசு உயர் பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்கள்.

அலெக்ஸ் கடத்தலைத் தொடர்ந்து இந்த தமிழக அதிகாரிகள் உள்பட அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கணவன் மனைவியான அன்பழகன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவியான கலெக்டர் அலர்மேல் மங்கை கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அலர்மேல் மங்கை மகா சமந்த் மாவட்ட கலெக்டராக இருக்கிறார்.

அலெக்ஸ் கடத்தலைத் தொடர்ந்து அங்கு அசாதாரண நிலை நிலவி வருவதால் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+