உங்கள் இச்சைக்கு மாணவனைப் பயன்படுத்துவதா?-குமுதுவுக்கு கோர்ட் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

Teacher Kumuthu
சென்னை: 17 வயது மாணவனுடன் ஓடிப் போன ஆசிரியை குமுது தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் தனது இச்சைக்கு மாணவனைப் பயன்படுத்திக் கொண்ட ஆசிரியையின் செயலை ஏற்க முடியாது என்றும் அது கூறியுள்ளது.

சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்த 17 வயது பிளஸ் ஒன் மாணவனுடன் தகாத நட்பை ஏற்படுத்திக் கொண்டார் 37 வயது ஆசிரியை குமுது. இந்த நட்பின் விளைவாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் இருவரையும் டெல்லி அருகே வைத்து போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஆசிரியை குமுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவர் அரசினர் காப்பகத்தில் வைக்கப்பட்டு அங்கு அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜாமீன் கோரி குமுது சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்திருந்தார். ஆனால் அதை நீதிபதி பொன். கலையரசன் நிராகரித்து விட்டார். இதுகுறித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,

குமுது எந்த தவறையும் செய்யவில்லை என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. அந்த மாணவன்தான் சொந்த விருப்பத்துடன் குமுதுவுடன் சென்றதாகவும், எனவே அது கடத்தல் குற்றத்தின் கீழ் வராது என்றும் குமுது சார்பில் வக்கீல் வாதிட்டார்.

இந்திய தண்டனைச் சட்டம் 363 மற்றும் 365 ஆகிய பிரிவுகளின்படி, 17 வயதுடைய மாணவனை சிறுவன் என்று கருத முடியாது என்றும் தெரிவித்தார். மனுதாரரின் வீடு சென்னையில் உள்ளது என்பதாலும், குழந்தையை கவனிக்க வேண்டியதிருப்பதாலும் குமுதுக்கு ஜாமீன் அளிக்க வேண்டுமென்று வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் தலைமை வக்கீல் எம்.எல்.ஜெகன், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியை டெல்லிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களை கடும்பாடுபட்டு போலீசார் பிடித்தனர். படிப்பில் மாணவன் தங்க மெடல் வாங்கியவன். இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் குமுதுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

நானும் இந்த வழக்கின் ஆவணங்களை எல்லாம் படித்துப் பார்த்தேன். 35 வயதுடையை இந்த ஆசிரியை தனக்கு கீழ் படிக்கும் விடலை பருவ மாணவனை, நெருக்கத்தை பயன்படுத்தி தவறாக உபயோகித்து இருக்கிறார். மாணவனின் மனநிலையை கணக்கிட்டு, அவனை பல நாட்களாக அவனது பெற்றோர் பள்ளிக்கு விடவில்லை.

ஆனால் செய்முறைத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றபோதுதான் மாணவன் வீடு திரும்பவில்லை. 4.2.12 அன்ற காணாமல் போன மாணவன் 15.3.12 அன்றுதான் குமுதுவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளான்.

மாணவனை தூண்டிவிட்டு, அவனை டெல்லிக்கு அழைத்துச் சென்று ரகசியமாக வைத்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, புனிதமான ஆசிரியை தொழிலை மறந்துவிட்டு இச்சைக்காக ஒரு மாணவனை குமுது பயன்படுத்தியிருக்கிறார்.

வழக்கு விசாரணை முடியவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எனவே ஆசிரியை குமுதுக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்.

இதனால் குமுது தரப்பு அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+