முல்லைப் பெரியாறு: சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்த ஐவர் குழு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மறுத்து வரும் கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால், அணை வலுவாக இருப்பதால் அதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு நியமித்தது.
இந்தக் குழு, அணையை சோதனையிட்ட 8 வல்லுனர் குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் இந்தக் குழுவின் இறுதி கட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 22ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரள அரசின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், தொழில்நுட்ப நிபுணர்களான தத்தா, மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அணை சுவரில் துளைகளிட்டும், அணையில் நீரின் அடியில் சென்று சேகரிக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணியைக் குழுவினர் தொடங்கினர். இந்நிலையில் இறுதி அறிக்கையை அந்த குழு வெற்றிகரமாக தயார் செய்து முடித்து.
இதையடுத்து 206 பக்கங்கள் கொண்ட அறிக்கை சீல் வைத்த கவரில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தங்கள் பதவிக்காலம் முடிய 5 நாட்கள் உள்ள நிலையில் அந்த குழு இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஐவர் குழு அளி்ககும் அறி்க்கையின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications