மரண தண்டனையை எதிர்த்த கசாப் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்றம்
டெல்லி: 26/11 மும்பை தாக்குதல்கள் வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தானிய தீவிரவாதி அஜ்மல் கசாபி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்தது. ஆனால் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பல இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். அவன் மீதான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், கசாபுக்கு மரண தண்டனை விதித்தது. இதை மும்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இதையடுத்து சிறை அதிகாரிகள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான் கசாப். அவன் சார்பி்ல வாதாட உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனை நியமித்தது. ராஜு ராமச்சந்திரன் கசாப் சார்பில் ஆஜராகி வாதாடி வருகின்றார். மும்பை தாக்குதல்கள் நடந்தபோது கசாப் சிறுவனாக இருந்தான். அவனது மத நம்பிக்கையை பயன்படுத்தி அவனை தவறான வழியில் கொண்டு சென்றுள்ளனர் என்று அவர் வாதாடினார்.
இந்த மனு நீதிபதிகள் அப்தார் ஆலம் மற்றும் சிகே பிரசாத் அடங்கிய பெஞ்ச் முன்பு கடந்த இரண்டரை மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை இன்றுடன் முடிந்தும் நீதிபதிகள் மறுதேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications