ஜெய்ராம் ரமேஷுக்கு ராகுல் காந்தி திடீர் 'சம்மன்'!
டெல்லி: காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் வரப் போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் ஜெயராம் ரமேஷை ஆலோசனைக்கு அழைத்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தொடர் தோல்விகளின் நாயகனுமான ராகுல் காந்தி.
2014ல் லோக்சபாவுக்குத் தேர்தல் வரப் போகிறது. அதற்கு முன்பாக கட்சியை சரி செய்ய சோனியா காந்தி நினைக்கிறார். இதற்காக அமைச்சர்கள் சிலரை கட்சிப் பணியில் ஈடுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சல்மான் குர்ஷித், குலாம் நபி ஆசாத், வயலார் ரவி உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இன்னொரு மூத்த அமைச்சரான ஜெயராம் ரமேஷை தன்னை வந்து பார்க்குமாறு ராகுல் காந்தி அழைத்துள்ளாராம். சமீப காலமாக கட்சியின் திட்டமிடல் வேலைகளை ராகுல்காந்திதான் முன்னின்று பார்த்து வருகிறார். எனவே ரமேஷை அவர் அழைத்துள்ளது பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.
ஜெயராம் ரமேஷ் தற்போது ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராக உள்ளார். அவரும் ராஜினாமா கடிதம் கொடுத்தவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. எனவே ரமேஷுக்கு கட்சியில் முக்கியப் பதவியை கொடுக்க ராகுல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications