அணு உலைக்கு எதிராக கையெழுத்திடாதவர்களை மிரட்டியதாக உதயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்கு

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் இடிந்தகைரயில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே முதலாவது அணு உலையில் இன்னும் 40 நாட்களில் மின் உற்பத்தி துவங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மின் உற்பத்தியை விரைவில் துவங்குவதற்காக அணு மின் நிலைய ஊழியர்கள் இரவு பகல் பாராது பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் அணு மின் நிலையப் பணிகளை முடக்க போராட்டக்காரர்கள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்தி்த்து அணு மின் நிலையத்தை மூட கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.
இதற்கிடையே செட்டிகுளத்தை சேர்ந்த 2 பேர், கூடங்குளத்தை சேர்ந்த 4 பேர், வைராவிகிணறை சேர்ந்த ஒருவர் ஆகியோர் கூடங்குளம் காவல் நிலையத்திலும், உவரியை சேர்ந்த 2 மீனவர்கள் உவரி காவல் நிலையத்திலும் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
அணுமின் நிலையத்திற்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் எங்களை போராட்டக்காரர்கள் மிரட்டுகின்றனர். மீனவர் சங்கத்தில் இருந்து நீக்கி விடுவதாகவும், அரசின் சலுகைகள் கிடைக்கவிடாமல் தடுத்துவிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் போலீசார் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications