கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பியாக்க காங். முடிவு

சச்சின் டெண்டுல்கர் (39), சர்வதேச கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். நேற்றுமுன்தினம் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடிய சச்சின், கடந்த 23 ஆண்டுகளாக நாட்டிற்காக கிரிக்கெட் ஆடி வருகிறார்.
கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே ஆடி வந்த சச்சினை, அரசியலில் களமிறக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சச்சினை நேரடியாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தார்.
சோனியாவின் அழைப்பை ஏற்று கொண்ட சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன், ஜன்பாத் இல்லத்தில் சோனியா காந்தியை நேரடியாக சந்தித்து பேசினார். சுமார் அரை மணிநேரம் தொடர்ந்த இந்த சந்திப்பின் போது, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவும் உடன் இருந்தார்.
சந்திப்பின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதத்தை கடந்த சச்சினின் சாதனையை சோனியா பாராட்டியுள்ளார். மேலும் வருங்காலத்தில் கிரிக்கெட்டில் சச்சின் பல சாதனைகளை புரிய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புகழ் உச்சியில் உள்ள சச்சினை, ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்க காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்து வலை வீசியுள்ளது. ஆனால் இதற்கு சச்சின் தரப்பின் என்ன பதில் தெரிவிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications