விபத்தில் சிக்கினால் தானாக 108க்கு தகவல் தரும் கருவி: பிஇ மாணவர்கள் கண்டுபிடிப்பு
நாகர்கோவில்: விபத்தில் சிக்கினால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் கருவியை நாகர்கோவில் தோவாளை லயோலா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த தோவாளை லாயோலா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஐசன் ஐசக், விவோ, மன்பீரித், மார்ட்டீன். இவர்கள் 4 பேரும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இறுதியாண்டு பயிலும் இவர்கள் ஜிபிஎஸ் உதவியுடன் செயல்படும் விபத்து கால உயிர்காக்கும் கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இதன்படி கார் மற்றும் வாகனங்களில் இந்த கருவியை பொருத்த வேண்டும். மேலும் இத்துடன் நமக்கு வேண்டிய 3 செல்போன் அல்லது தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ள முடியும்.
வாகனம் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் அதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக தானாக இயங்கும் இந்த கருவி ஜிபிஎஸ் உதவியுடன் 108 மற்றும் அருகாமையிலுள்ள பெரிய மருத்துவமனை மற்றும் நாம் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள செல்போன் நம்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் வாய்ஸ் மெயிலில் தகவல் தெரிவிக்கும். மேலும் வாகனம் விபத்தில் சிக்கியுள்ள இடத்தையும் தெரிவிக்கும். இதனால் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விபத்தில் சிக்கினாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உயிர் காக்கப்படும். இந்த கருவியை பொறுத்த ரூ.300 மட்டுமே செலவு ஆகும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications