சட்டப்பேரவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து விஜயகாந்த் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சட்டப்பேரவையில் நாக்கைத் துருத்தி கண்கள் சிவக்க விஜயகாந்த் பிப்ரவரி 3-ந் தேதி பேசினார். விஜயகாந்தின் நடவடிக்கை அவை உரிமையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக உரிமைக் குழு விசாரணைக்கு விஜயகாந்த் அழைக்கப்பட்டபோதும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து பேரவையில் விஜயகாந்தை 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தாம் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது பதிலளிக்குமாறு சட்டப்பேரவைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு கடந்த வாரம் பதிலளித்திருந்த சட்டப்பேரவைச் செயலாளர், விஜயகாந்த் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அக்கட்சியின் அவைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் எதிர்க்கவில்லை. இதனால் விஜயகாந்த் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் நடைபெற்ற விசாரணையில் முடிவில் இன்று விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராமசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications