தூத்துக்குடி துறைமுகத்தில் 2வது சரக்கு பெட்டக முனையம்

Subscribe to Oneindia Tamil

Tuticorin port
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.1,500 கோடியில் 2வது சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது என துறைமுக தலைவர் சுப்பையா தெரிவித்தார்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் செயல்திறன் குறித்து துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுப்பையா கூறியதாவது,

2011-12ம் ஆண்டு வ.உ.சி. துறைமுகம் 281.50 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த அளவு கடந்த ஆண்டை விட 9.24 சதவீதம் கூடுதலாகும். வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள 13 பெரிய துறைமுகங்களில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு துறைமுகத்தில் கையாளப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை 1,490 ஆகும்.

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 29.62 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. துறைமுகத்தின் இயக்க வருவாய் ரூ.303.49 கோடியாகும். இயக்க உபரி வருவாய் ரூ.164.73 கோடியாகவும், வரி பிடித்தத்திற்கு பின் உள்ள நிகர உபரி வருவாய் ரூ.102.03 கோடியாகவும் உள்ளது.

துறைமுக வரலாற்றில் 2வது முறையாக ரூ.100 கோடிக்கு மேல் வரிக்கு பிந்தைய நிகர உபரி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. துறைமுகத்தின் கொள்ளவை அதிகரிக்கும் வகையில் நடப்பு ஆண்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

2வது சரக்கு பெட்டக முனையம் அமைத்தல், 2வது, 3வது, 4வது வடக்கு சரக்கு தளங்கள், இரண்டு குறைந்த ஆழம்கொண்ட கப்பல் தளங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளது. துறைமுகத்தின் கொள்ளளவு வரும் 2014-15-ல் 50 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+