ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு: நெல்லை கலெக்டர்
நெல்லை: கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள 2 கிமீ பகுதியில் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவு வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நெல்லை கலகெடர் செல்வராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள 2 கிமீ பகுதியில் 144 தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இந்த சட்டம் அமலில் இருக்கும் காலத்திலேயே அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
எனவே வேறுவிதமான சம்பவங்கள், எந்தவிதமான கலவரங்களும் ஏற்படாமல் பொது அமைதியை பாதுகாக்க ஏதுவாக அணு மின் நிலையத்துக்கு எதிரான கருத்துள்ளவர்கள், கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவுக்கு உதவி செய்பவர்கள், அவர்களை தூண்டி விடும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் வரும் மே 31ம் தேதி மாலை 6 மணி வரை ராதாபுரம் தாலுகா, கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள 2 கிமீ பகுதிக்குள் நுழையக் கூடாது என்றார்.
ஒரு புறம் 144 தடை உத்தரவு அமலில் இருக்க மறுபுறம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தியைத் துவங்குவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications