புதுக்கோட்டையில் ஓட்டுவேட்டைக்குக் கிளம்பினார் கார்த்திக் தொண்டைமான்!

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்த கையோடு அடுத்த இடைத் தேர்தலை பார்க்கிறது தமிழ்நாடு. புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துக்குமரன் மறைவால் அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத் தேர்தலில் போட்டியிடும் என்று நம்பப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடைசியில் தேர்தலில் போட்டியிடாமல் விலகி விட்டது. திமுக இன்னும் முடிவு செய்யவில்லை. தேமுதிகவின் நிலையும் தெரியவில்லை. மற்ற கட்சிகளும் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்களையும் அவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திக் தொண்டைமான் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். பிரசாரத்திற்கு முன்பு திருக்கோவர்ணம், திருவொப்பூரில் உள்ள கோவில்களுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்து அதிமுக பிரசாரத்தையும் தொடங்கியுள்ளதை புதுக்கோட்டை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications