புண்ணால் அவதிப்படும் சங்கரன்கோவில் கோவில் யானை கோமதி

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் கோவில் யானை கோமதி புண்ணால் அவதிப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோவில் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கும் வகையிலும், திருவிழாக்காலங்களில் ஊர்வலத்திற்கு கொண்டு செல்லவும் பெண் யானை கோமதி வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த யானை தங்குவதற்காக நடராஜர் சன்னதி பின்புறம் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் கோவிலுக்கு பிரசாதம் தயாரிக்கும் சமையல் அறையும் உள்ளது. இங்கிருந்து வரும் புகையாலும், எண்ணெய் கசிவாலும் யானை கோமதிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன் ஏற்பட்ட புண்ணால் யானை அவதிப்பட்டது. முதுமலை காட்டில் புத்துணர்ச்சி முகாமுக்கு சென்று வந்த பின்னர் அந்த புண் குணப்படுத்தப்பட்டது. இந்நிலையில் யானையின் கன்னத்தில் தற்போது ஒரு புண் ஏற்பட்டுள்ளது. இந்த புண் நீண்ட நாட்களாக இருப்பதால் யானை அவதிப்பட்டு வருகிறது.

பக்தர்கள் கோமதியின் மீது கொண்ட அன்பால் ஏகப்பட்ட வாழைப்பழங்களைக் கொடுத்ததால் அதன் எடை ஒரேயடியாக அதிகரித்தது. இதையடுத்து வாழைப்பழங்கள் குறைவாக கொடுக்கப்பட்டு எடை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+