பெரும் கஷ்டத்தில் 3ல் ஒரு இந்தியர்!

கேலப் பைனான்சியல் வெல்பீயிங் இன்டெக்ஸ் (Gallup's Financial Wellbeing Index) எனப்படும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் குறியீட்டு எண் தொடர்பான கருத்துக் கணிப்பில் 3ல் ஒரு இந்தியர் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடுப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தங்களது பொருளாதாக நிலை மோசமாகியுள்ளதாக 31 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலமும் இதே போல இருக்கப் போகிறது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாக இருந்தது.
அதாவது 2011ம் ஆண்டில் 4ல் ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார். இப்போது அது 3ல் ஒருவர் என்ற அளவுக்கு மோசமாகியுள்ளது.
அதே போல கடந்த ஆண்டு 'நல்லா இருக்கேன் சார்' என்று பதில் சொன்னவர்கள் எண்ணிக்கை 21 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டு 13 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது போன வருடம் 5ல் ஒரு இந்தியர் சந்தோஷமாக இருந்தார். அது இந்த ஆண்டு 8ல் ஒரு இந்தியர் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அதிலும் கிராமப் புறங்களில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. கிராமப் பகுதிகளில் 36 சதவீதம் பேர் கஷ்டத்தில் இருப்பதாகக் கூற, நகர்ப் பகுதிகளில் இது 21 சதவீதமாக உள்ளது.
பொருளாதார மந்தம், உயர்ந்து போன வட்டி விகிதம், கைக்கு எட்டாத அளவுக்கு போன வங்கிக் கடன்கள், பல புதிய திட்டங்களை ஒத்திப் போட்டுவிட்ட நிறுவனங்கள், இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில் முடக்கம் என எல்லா பக்கமுமே நிலைமை நல்லாயில்லை.
இந்த விஷயத்தில் இந்தியாவை விட சீனாவும், பிரேசிலும் பரவாயில்லை என்கிறது கேலப் கருத்துக் கணிப்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications